​​ ரிச்சர்ட் பீலேயிடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரிச்சர்ட் பீலேயிடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்

ரிச்சர்ட் பீலேயிடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்

Sep 12, 2018 9:32 PM

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்களை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அக்டோபர் முதல் வாரத்தில் ஆறுமுசாமி ஆணையம் விசாரணை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பதற்கான வசதி ஆணையத்தில் இல்லை. தேசிய பசுமை தீர்பாயத்தில் அதற்கான வசதி இருப்பதால் அங்கு விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 18 ம் தேதிக்குள் அனைத்து விசாரணைகளையும் முடித்து, அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் அரசிடம் அறிக்கை சமர்பிக்கும் திட்டத்துடன் ஆணையம் முனைப்பு காட்டுவதாவும் கூறப்படுகிறது.