​​ பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Sep 12, 2018 8:43 PM

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கடந்த 4ஆம் தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு விநாயகர் காட்சி அளித்தார். ஒன்பதாம் நாளான புதன் கிழமை அன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்

சதுர்த்தி அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.