​​ சர்ஜிக்கல் தாக்குதலின்போது உதவிய சிறுத்தையின் சிறுநீர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்ஜிக்கல் தாக்குதலின்போது உதவிய சிறுத்தையின் சிறுநீர்

சர்ஜிக்கல் தாக்குதலின்போது உதவிய சிறுத்தையின் சிறுநீர்

Sep 12, 2018 8:25 PM

சர்ஜிக்கல் தாக்குதலின்போது, சிறுத்தையின் சிறுநீர் கூட உதவியதாக, ராணுவ உயர் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ஜிக்கல் தாக்குதல் குழுவில் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர ராம்ராவ் ((Lieutenant General Rajendra Ramrao)) தெரிவித்திருக்கிறார். இந்திய எல்லையிலிருந்து, தாக்குதல் நடத்தும் பகுதிக்கு செல்லும்போது, வழியில்  இருந்த கிராமங்களில் நாய்கள் குரைத்தால் என்ன செய்வது என்று யோசித்ததாகவும், அப்போது, இந்த திட்டம் உதயமானதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சிறுத்தையை கண்டால் நாய் அதிகம் பயப்படும் என்பதை அறிந்திருந்தால், சிறுத்தையின் சிறுநீரை, ஊர் பகுதியில் ஆங்காங்கே தெளித்தபோது, அதனை மோப்பம்பிடித்த நாய்கள், சப்தமின்றி அமைதியாக இருந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். இதனால், எவ்வித சிரமுமின்றி, சர்ஜிக்கல் தாக்குதலை திட்டமிட்டவாறு முன்னெடுத்து, தீவிரவாதிகளை, அவர்களது வழிபாட்டு நேரத்திற்கு முன்னரே, கொன்றழித்துவிட்டதாக, லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர ராம்ராவ் கூறியிருக்கிறார்.