​​ அமெரிக்காவில் நடைபெற்ற வினோத திருட்டு - 7000 பூச்சிகள் கடத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் நடைபெற்ற வினோத திருட்டு - 7000 பூச்சிகள் கடத்தல்

அமெரிக்காவில் நடைபெற்ற வினோத திருட்டு - 7000 பூச்சிகள் கடத்தல்

Sep 12, 2018 7:34 PM

அமெரிக்காவின் காட்சியகத்தில் இருந்து ஒரே நேரத்தில் 7000 பூச்சிகள் திருடப்பட்டுள்ளன.

அந்நாட்டின் பிலடெல்பியாவில் பல  ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பூச்சியின காப்பகத்தில் இருந்து அரிய வகை சிலந்திகள், கரப்பான்பூச்சிகள் என 7000 உயிரினங்களை  காணவில்லை. கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது, காட்சியக ஊழியர்கள் சிலர், அவற்றை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. 

தலைமறைவான தொழிலாளர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறும் நிலையில் பூச்சிகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாய், பூனைகள் போலவே பூச்சிகளை வளர்க்கும் ஆர்வம் அமெரிக்காவில் அதிகரித்துள்ள நிலையில் கடத்தப்பட்ட பூச்சிகளின் சந்தை மதிப்பு 40 லட்ச ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரே நேரத்தில் 7000 பூச்சிகள் கடத்தப்பட்டதும் இது தான் அமெரிக்காவிலேயே முதல் முறை.