​​ விநாயகர் சதுர்த்தியையொட்டி களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விநாயகர் சதுர்த்தியையொட்டி களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை

Published : Sep 12, 2018 6:49 PM

விநாயகர் சதுர்த்தியையொட்டி களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை

Sep 12, 2018 6:49 PM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை எழும்பூரை அடுத்த கொசப்பேட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனை களை கட்டியுள்ளது.

கொசப்பேட்டையில் வீடுகளில் செய்யப்பட்ட அரையடி முதல் 5 அடி வரை உயரமுள்ள கலைநயம் மிக்க விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை 35 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

மேலும் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 15 அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் ஒருங்கே நடைபெறுவதால் வியாபாரிகளும், மக்களும் இங்கு வந்து சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.

களிமண் கிடைக்காததால் இந்த ஆண்டு சிலைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொசப்பேட்டை சந்தையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவல், பொரி, பழங்கள் பூக்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.