​​ சென்னையில் 17 வயது சிறுமிக்கு கோயிலில் நடந்த திருமணம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் 17 வயது சிறுமிக்கு கோயிலில் நடந்த திருமணம்

சென்னையில் 17 வயது சிறுமிக்கு கோயிலில் நடந்த திருமணம்

Sep 12, 2018 6:43 PM

சென்னையில் சிறுமிக்கு திருமணம் நடந்த நிலையில், போலீசார் அந்த சிறுமியை மீட்டனர்.

யானைகவுனியில் உள்ள குமரக்கோட்டம் வாணி சுப்ரமணி கோயிலில் காலை 6 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த மோகன கிருஷ்ணனுக்கு திருமணம் நடந்தது. அடையாறு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து வைப்பதாக போலீசாருக்கு வந்த புகாரை அடுத்து போலீசார் கோயிலுக்கு செல்வதற்குள் திருமணம் முடிந்து மணமக்கள் சென்றுவிட்டனர். இதையடுத்து உறவினர்களை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், மணமகள் 17 வயது சிறுமி என்பதை உறுதிபடுத்திக் கொண்டனர்.

image

இதையடுத்து சென்னை அடையாறில் மணக்கோலத்தில் இருந்த மணமக்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். சமூக நலத்துறைக்கு போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் மணக்கோலத்தில் இருந்த சிறுமியை மீட்ட அதிகாரிகள் கெல்லீஸ் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.