​​ ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 90 சவரன் நகை ரூ. 4 லட்சம் கொள்ளை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 90 சவரன் நகை ரூ. 4 லட்சம் கொள்ளை

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 90 சவரன் நகை ரூ. 4 லட்சம் கொள்ளை

Sep 12, 2018 5:46 PM

திருவள்ளூர் மாவட்டம் பன்னூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டு ஜன்னலை உடைத்து 90 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் அதிபரான ஜான் பீட்டரும், ஆசிரியையான அவரது மனைவி எலிசபெத் ராணியும் இன்று காலை வழக்கம் போல பணிக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில் பிற்பகலில் வீடு திரும்பிய ஜான்பீட்டர், தனது வீட்டு ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு 90 சவரன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.