​​ அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மகிளா நீதிமன்றத்தில் 2 மாதங்களுக்குள்ளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மகிளா நீதிமன்றத்தில் 2 மாதங்களுக்குள்ளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மகிளா நீதிமன்றத்தில் 2 மாதங்களுக்குள்ளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Sep 12, 2018 5:39 PM

சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கு எதிராக இரண்டு மாதங்களுக்குள்ளாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

image

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அச்சிறுமியை குடியிருப்பில் பணிபுரிந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த காவலாளி, பிளம்பர் என 17 பேர் 7 மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அயனாவரம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

image

இதை அடுத்து 17 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த 17 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. சிறுமி முன்னிலையில் சிறையில் அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. வழக்கை விரைவுபடுத்துவதற்காக அரசு சிறப்பு வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டார்.

17 பேர் ஜாமினில் செல்வதை தடுப்பதற்காக குண்டர் சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், 17 பேர் கைது செய்யப்பட்ட 2 மாதங்களுக்குள்ளாகவே அயனாவரம் மகளிர் போலீசார், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாவிட்டால் கைதிகள் ஜாமினில் செல்ல வழிவகுத்து விடும் என்ற சூழலில் 2 மாதத்திற்குள்ளாகவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.