​​ மாமனார், மாமியார், கணவரின் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாமனார், மாமியார், கணவரின் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Published : Sep 12, 2018 5:28 PM

மாமனார், மாமியார், கணவரின் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Sep 12, 2018 5:28 PM

சென்னை திருமுல்லைவாயில் அருகே கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமை செய்வதாக செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்த தேவநாத் என்பவருக்கும், அம்பத்தூரை சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணமாகியுள்ளது. இருவரும் தேவநாத்தின் தந்தை சம்மந்தம், தாய் சிவகாமி ஆகியோருடன் செந்தில் நகர் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆனந்தி நேற்று வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்ளும் முன்பு 8 பக்க கடிதம் எழுதியதுடன் செல்போனில் தற்கொலைக்கான காரணத்தை கூறி வீடியோ பதிவு செய்துள்ளார் ஆனந்தி. அதில் தனது மாமியார் கொடூர குணம் கொண்டவர் என்றும், மாமனார் மனைவிக்கு பயப்படும் பயந்தாகோலி என்றும் கூறியுள்ளார். தனது கணவர் அம்மாவுக்கு பயந்த கோழை என கூறியுள்ள ஆனந்தி, ஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனால் இந்த கோழைக்கு மனைவியாக வாழ்வதை விட சாவதே மேல் என்பதால், தற்கொலை செய்துகொள்வதாகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஆனந்தியின் கடிதம் மற்றும் வீடியோவைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.