​​ ரூ. 600 திருடியதாக ஆசிரியை திட்டியதால், 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ. 600 திருடியதாக ஆசிரியை திட்டியதால், 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

ரூ. 600 திருடியதாக ஆசிரியை திட்டியதால், 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

Sep 12, 2018 5:25 PM

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே 600 ரூபாயை திருடியதாக ஆசிரியை திட்டியதால், 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரிசிபாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது இரண்டாவது மகள் வசந்தி, அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் லீனா என்பவர், தான் வைத்திருந்த 600 ரூபாய் பணம் திருட்டுப்போனதாக மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவி வசந்தியை அழைத்த லீனா, பணத்தை திருடியதாக கூறி மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி வசந்தி தற்கொலை செய்துக்கொள்வதாக கூறிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார். அப்பள்ளி ஆசிரியர்கள் பிடிக்க முயன்ற நிலையில், பள்ளிக்கு அருகேயுள்ள கிணற்றில் குதித்து வசந்தி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.