​​ கேரள கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஜலந்தர் தேவாலய பேராயருக்கு சம்மன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஜலந்தர் தேவாலய பேராயருக்கு சம்மன்

கேரள கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஜலந்தர் தேவாலய பேராயருக்கு சம்மன்

Sep 12, 2018 5:15 PM

கேரள கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் குறித்து வரும் 19-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஜலந்தர் தேவாலய பேராயர் ஃபிரான்கோ முல்லக்கலுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஜலந்தரில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலய பேராயர் ஃபிரான்கோ முல்லக்கல் 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை 13 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக பேராயர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவும் அரசியல் மற்றும் பணபலத்தைப் பயன்படுத்தி 5 கோடி ரூபாயைப் பெற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற வலியுறுத்துவதாகவும் கன்னியாஸ்திரி தரப்பு குற்றம்சாட்டியது.

ஆனால் பேராயர் ஃபிரான்கோ கன்னியாஸ்திரியின் குற்றச்சாட்டை மறுத்துவரும் நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. நாளை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், இன்று காவல்துறை உயரதிகாரிகள் கூடி ஆலோசித்து 13ந் தேதி நேரில் ஆஜராகுமாறு பேராயர் ஃபிரான்கோவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.