​​ அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் சென்னையில் பேரணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் சென்னையில் பேரணி

அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் சென்னையில் பேரணி

Sep 12, 2018 5:02 PM

காலவரன்முறை ஊதிய உயர்வை அளிக்க வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் பேரணி நடத்தினர்.

சென்னை கலைவாணர் அரங்கம் முன்பாக துவங்கிய இந்த பேரணியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பங்கேற்றனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை வந்த பேரணி போலீசார் அமைத்திருந்த தடுப்பு காரணமாக தொடர்ந்து செல்லவில்லை.

இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் அங்கிருந்தபடியே முழக்கங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் செந்தில், அரசு மருத்துவர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.