​​ சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு, முதலுதவி செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு, முதலுதவி செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்

சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு, முதலுதவி செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்

Sep 12, 2018 5:02 PM

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு, முதலுதவி செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.

image

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். பரம்பூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் சிக்கியதை கண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், உடனடியாக அவரை, தமது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றியதுடன், அதே வாகனத்தில் தாமும் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தார்.

அங்கு இளைஞருக்கு முதலுதவி சிகிச்சைகளை செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், மேல் சிகிச்சைக்காக இளைஞரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.