​​ 19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல்

19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல்

Sep 12, 2018 4:08 PM

ஹர்திக் பட்டேல் 19 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முடித்துக் கொண்டுள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடி, பட்டீதார் இனத்துக்கான இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். குஜராத் அரசு தரப்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் கடந்த 7-ம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.

மருத்துவமனையில் இரு நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியபோதும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த ஹர்திக், தமது நெருங்கிய ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று இன்று பிற்பகல் 3 மணியளவில் தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆதரவாளர்களின் ஆலோசனைப் படி கோரிக்கை நிறைவேற அரசை எதிர்த்து வேறு வழிகளில் போராட முடிவெடுத்துள்ளதாக ஹர்திக் கூறியுள்ளார்.