​​ நாகர்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுனரின் சகோதரி, ஆண் நன்பருடன் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகர்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுனரின் சகோதரி, ஆண் நன்பருடன் கைது

நாகர்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுனரின் சகோதரி, ஆண் நன்பருடன் கைது

Sep 12, 2018 4:04 PM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது சகோதரியையும், ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்த நீலசாமி, அப்பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 7ஆம் தேதி  கோட்டவிளை பகுதியில் உள்ள கிணற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் நீலசாமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முகம் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நீலசாமியின் சகோதரி அமராவதியின் வீட்டிற்கு அவர் அடிக்கடி சென்று வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அமராவதியிடன் போலிசார் விசாரணை நடத்தியபோது, தனது முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஆண் நண்பரான பிரசாத்துடன் சேர்ந்து நீலசாமியைக் கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அமராவதி, பிரசாத் ஆகிய இருவரையும் போலீசார் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.