​​ சென்னையில் கடைகள் திறந்திருக்க வேண்டிய நேரம் குறித்த நிபந்தனைகளை உருவாக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் கடைகள் திறந்திருக்க வேண்டிய நேரம் குறித்த நிபந்தனைகளை உருவாக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் கடைகள் திறந்திருக்க வேண்டிய நேரம் குறித்த நிபந்தனைகளை உருவாக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 12, 2018 3:58 PM

சென்னையில் கடைகள் திறந்திருக்க வேண்டிய நேரம் குறித்த நிபந்தனைகளை உருவாக்க சென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த கணேஷ் பிரபு என்பவரின் மனுவில் இரவு 10 மணிக்கு காவல்துறையினர் உணவகத்தை மூட வலியுறுத்தியதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் மட்டுமே காவல்துறை தலையிட்டு கடைகளை மூடவேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உணவகங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வருவதாகவும் அவை திறக்கும் மற்றும் மூடும் நேரங்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும் கோரப்பட்டிருந்தது.

மாநகராட்சி ஆணையரை எதிர்  மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், சென்னையில் எந்தெந்த பகுதியில் எத்தனை மணிநேரம் கடைகள் திறந்திருக்கவேண்டும் என்பது குறித்த நிபந்தனைகளை உருவாக்க அறிவுறுத்தி விசாரணையை அக்டோபர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.