​​ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் மலர்கள் விலை கடுமையாக உயர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் மலர்கள் விலை கடுமையாக உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் மலர்கள் விலை கடுமையாக உயர்வு

Sep 12, 2018 3:20 PM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் மலர்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை  முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. அவல், பொரி, மாவிலை, தோரணம், கம்பு, சோளம், விளாங்காய், பேரிக்காய், வாழைக்கன்று, பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூ விலை 2 முதல் 3 மடங்கு உயர்ந்துள்ளது.  வீடுகளில் வைக்கும் விநாயகர் சிலைகள் 30 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் விநாயகர் குடை உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.