​​ அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

Sep 12, 2018 3:19 PM

பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பேரறிவாற்றலுடன் தனித்துவமிக்க தலைவராக விளங்கிய அண்ணா, திராவிட தலைவர்களிலேயே உயர்ந்தவராக திகழ்வதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை இயற்றிய தீர்மானத்தை ஏற்று, பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று, எம்ஜிஆர்-ன் 100ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, "புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்றும், மற்றொரு கடித்தத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.