​​ பழுதடைந்த 2 கப்பல்களை உடைக்க ஏன் அனுமதி தரக் கூடாது? சென்னை துறைமுக நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பழுதடைந்த 2 கப்பல்களை உடைக்க ஏன் அனுமதி தரக் கூடாது? சென்னை துறைமுக நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

பழுதடைந்த 2 கப்பல்களை உடைக்க ஏன் அனுமதி தரக் கூடாது? சென்னை துறைமுக நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Sep 12, 2018 3:16 PM

சென்னை துறைமுகத்தில் 8 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 2 கப்பல்களை உடைக்க ஏன் அனுமதிக்க கூடாது என  சென்னை துறைமுக நிர்வாகத்திற்கு  உயர்நீதிமன்றம் கேள்வி ஏழுப்பியுள்ளது. 

ரைசிங் ஸ்டார் மற்றும் ரைசிங் சன் என்ற 2 கப்பல்கள்  பழுதடைந்ததால் கடந்த 8 ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, கப்பல்களை உடைக்க சென்னை துறைமுக நிர்வாகம் அனுமதி தராததால், அந்த உத்தரவை எதிர்த்து கப்பல் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, மூழ்கும் நிலையில் உள்ள இந்த கப்பல்களை உடைக்க அனுமதித்தால், மேலும் பல நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டி வரும் என்றும்  இதன் காரணமாக கடலில் மாசு ஏற்படும் என்றும்  துறைமுக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த இரு கப்பல்களின் தற்போதைய நிலை குறித்தும் அவற்றை உடைக்க அனுமதிப்பது குறித்தும் ஒரு நிபுணர் குழுவை அமைத்து, ஆய்வு செய்ய உத்தரவிடலாமா? என்று  கேள்வி எழுப்பிய நீதிபதி,  இந்த வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு  தள்ளிவைத்தார்.