​​ இனிப்பு, கார வகைகளால் ஆன பிள்ளையார் சிலை படைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இனிப்பு, கார வகைகளால் ஆன பிள்ளையார் சிலை படைப்பு

இனிப்பு, கார வகைகளால் ஆன பிள்ளையார் சிலை படைப்பு

Sep 12, 2018 3:14 PM

சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில், இனிப்பு, கார வகைகளால் ஆன பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு, வித்தியாசமாக பிள்ளையார் சிலை அமைத்து, அதை காட்சிப்படுத்துவது வழக்கம்.

இந்தாண்டு, இனிப்பு மற்றும் கார வகைகளால் ஆன பிள்ளையார் சிலை அமைக்கப்படுகிறது. முதலில் களிமண்ணால் சிலை செய்து, 300 கிலோ எடையுள்ள, அதிரசம், ஜாங்கிரி, அப்பம் உள்ளிட்ட இனிப்பு வகைகளும், முறுக்கு, தட்டை உள்ளிட்ட கார வகைகளும் ஒட்டப்பட்டு, பிள்ளையார் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. கண்கள் உள்ளிட்ட நுணுக்கமான பகுதிகளில், முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை ஒட்டப்பட்டுள்ளன. கணபதி ஹோமத்துடன் நாளை திறந்துவைக்கப்படும் பிள்ளையாருக்கு மூன்று நாட்கள் வழிபாடு நடைபெறும்.