​​ பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ ரகசிய கூட்டத்தில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை நிராகரித்த நேபாள ராணுவ தலைமை தளபதி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ ரகசிய கூட்டத்தில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை நிராகரித்த நேபாள ராணுவ தலைமை தளபதி

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ ரகசிய கூட்டத்தில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை நிராகரித்த நேபாள ராணுவ தலைமை தளபதி

Sep 12, 2018 3:12 PM

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ ரகசிய கூட்டத்தில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை நேபாள நாட்டின் ராணுவத் தலைமை தளபதி நிராகரித்தார்.

வங்கக்கடலை ஒட்டி அமைந்துள்ள நாடுகளிடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்த உருவாக்கப்பட்டதே பிம்ஸ்டெக் கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பு நாடுகளின் ராணுவத்தினர் பங்கேற்கும் கூட்டுப்பயிற்சி மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நடைபெற்று வருகிறது.

ஆனால் இதில் தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி நடைபெறும் ராணுவ தலைமை தளபதிகள் ரகசிய கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நேபாள ராணுவத் தலைமை தளபதி பூர்ண சந்திர தபா (( Purna Chandra Thapa)) நிராகரித்தார்.