​​ கர்நாடக காங். எம்.எல்.ஏக்கள் யாரும் கட்சியில் இருந்து வெளியேறவில்லை - தினேஷ் குண்டுராவ்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடக காங். எம்.எல்.ஏக்கள் யாரும் கட்சியில் இருந்து வெளியேறவில்லை - தினேஷ் குண்டுராவ்

கர்நாடக காங். எம்.எல்.ஏக்கள் யாரும் கட்சியில் இருந்து வெளியேறவில்லை - தினேஷ் குண்டுராவ்

Sep 12, 2018 2:24 PM

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் கட்சியில் இருந்து வெளியேறவில்லை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

மாநில அமைச்சராக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜர்க்கிஹோலி, அவரது சகோதரரும் முன்னாள் அமைச்சருமான சதீஷ் ஜர்க்கி ஹோலி ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதாகவும், கட்சியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகவும், தகவல் வெளியானது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், போர்க்கொடி உயர்த்தியதாகச் சொல்லப்படுபவர்கள் தன்னுடனும் கட்சியின் பிற தலைவர்களுடனும் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்தார்.

பா.ஜ.க.வில் இருந்து 7 முதல் 8 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கூட்டணிக்கு வரத் தயாராக இருப்பதாகவும், பா.ஜ.க. அரசியல் விளையாட்டைத் தொடர்ந்தால் தாங்களும் சும்மா இருக்கப் போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.