​​ பாக்., முன்னாள் பிரதமர் சிறை செல்லும் முன் மனைவியிடம் விடைபெற்ற காட்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாக்., முன்னாள் பிரதமர் சிறை செல்லும் முன் மனைவியிடம் விடைபெற்ற காட்சி

பாக்., முன்னாள் பிரதமர் சிறை செல்லும் முன் மனைவியிடம் விடைபெற்ற காட்சி

Sep 12, 2018 1:59 PM

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃப் நாடு திரும்பும் முன் லண்டனில் சிகிச்சையில் இருந்த தமது மனைவியிடம் உணர்வுப் பூர்வமாக விடைபெறும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃப்பின் மனைவி பேகம் குல்சூம் நவாஸ் ((Begum Kulsoom Nawaz )) உயிரிழந்தார்.

முன்னதாக, கடந்த ஜூலையில் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பும் முன் கடைசியாக படுத்தபடுக்கையாக சுயநினைவிழந்து கிடக்கும் தமது மனைவியிடம் நவாஸ் விடைபெற்றார்.

அதில் இறைவன் பலம் தரட்டும் என்றும், கண்திறந்து பார்க்குமாறும் அவர் உணர்வுப் பூர்வமாக கெஞ்சுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.சிறை செல்லும் முன்பாக தமது மனைவியை இந்த சூழலில் விட்டுச் செல்வது தமக்கு மிகுந்த மன வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.