​​ ஆற்றில் மணல் திருடிய லாரிகளை பொதுமக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆற்றில் மணல் திருடிய லாரிகளை பொதுமக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

ஆற்றில் மணல் திருடிய லாரிகளை பொதுமக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Sep 12, 2018 1:49 PM

இராமநாதபுரத்தை அடுத்த சோழந்தூர் அருகே ஆற்றில் மணல் திருடிய லாரிகளை பொதுமக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இராமநாதபுரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் வலது புறம் குண்டத்தூர் அருகே மணல் பொதிந்து கிடப்பதை அறிந்த சில மணல் கொள்ளையர்கள், இரவு பகலாக மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அங்கு சென்ற அப்பகுதி இளைஞர்கள், லாரி மற்றும் ஜே.சி.பி. இயந்திரத்தின் சக்கரங்களை அரிவாள் கொண்டு பஞ்சர் செய்துள்ளனர். லாரி மற்றும் ஜே.சி.பி. இயந்திர ஓட்டுனர்கள் தப்பியோடிய நிலையில், வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.