​​ உதகை, சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதகை, சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

உதகை, சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

Sep 12, 2018 1:40 PM

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு பருவ மழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்தது. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு பைக்காரா, எமரால்டு உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தேயிலை மற்றும் காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.