​​ உலகமே போற்றும் இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்-க்கு நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகமே போற்றும் இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்-க்கு நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?


உலகமே போற்றும் இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்-க்கு நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?

Mar 14, 2018 9:02 PM

உலக ஆராய்ச்சிகளே கண்டு வியந்த இயற்பியல் ஆய்வாளர் ஸ்டீபன் ஹாக்கிங்சுக்கு இதுவரை நோபல் பரிசு கிடைக்காதது ஏன் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

பூமி மட்டுமின்றி, பால்வீதியின் அடிப்படையே கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசான் தான் என இங்கிலாந்து இயற்பியல் ஆய்வாளரான பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 1964ஆம் ஆண்டு கண்டறிந்தார். அவருடைய கருத்தை ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு பீட்டர் ஹிக்ஸின் கருத்தை ஐரோப்பிய இயற்பியல் ஆய்வு நிறுவனம் உறுதி செய்தது. இதையடுத்து, அந்த ஆய்வு நிறுவனத்துக்கும் பீட்டர் ஹிக்ஸுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங், கடவுள் துகளின் முடிவு கருந்துளை என்றும், அதுவே நட்சத்திரம் உள்பட அனைத்தின் முடிவு என்றும் கூறினார்.

இதனால், பூமி உள்பட அனைத்து கிரகங்களும் அழிந்துவிடும் என்றும் தெரிவித்தார். இந்த கருத்தை அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக்கொண்டாலும், அது நிரூபிக்க முடியாத நிலையில் இருப்பதால், இதுவரை ஸ்டீபன் ஹாக்கிங்சுக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை.