​​ அசாமில் 5.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அசாமில் 5.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அசாமில் 5.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Sep 12, 2018 1:26 PM

அசாமில் 5.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் கவுகாத்தியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோக்ரஜ்ஹார் மாவட்டத்தில் காலை சுமார் 10 மணி அளவில் நிலநடுக்கம் உருவானது.

கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கத்தால் மேற்குவங்கம், நாகலாந்து, மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இதனால் வீடுகள், அலுவலகங்களை விட்டு மக்கள் வெளியேறினர். இருப்பினும் நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.