​​ உலக வங்கி மேற்பார்வை செய்வதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை : அரசு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலக வங்கி மேற்பார்வை செய்வதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை : அரசு

உலக வங்கி மேற்பார்வை செய்வதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை : அரசு

Sep 12, 2018 1:18 PM

உலக வங்கி மேற்பார்வையில் நடைபெறும் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைத் திட்டத்தில், முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இது உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாலைத் திட்டத்திற்கு நிதி உதவி அளிக்கும் உலக வங்கியே, டெண்டரை மேற்பார்வை செய்து வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். முதலமைச்சரின் உறவினர்கள் என்பதால், டெண்டர் எடுக்கக் கூடாதா? என வாதிட்ட அரசு வழக்கறிஞர், முதலமைச்சரின் உறவினர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஒப்பந்தங்களை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, குற்றச்சாட்டு குறித்து நடத்தப்பட்ட விசாரணை குறித்தும், ஒப்பந்த ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்த விசாரணையின் நிலை குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதை விரிவான அறிக்கையாக மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.