​​ காவல் நிலையத்தில் கைதியால் தாக்கப்பட்ட காவலர் மரணம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல் நிலையத்தில் கைதியால் தாக்கப்பட்ட காவலர் மரணம்

காவல் நிலையத்தில் கைதியால் தாக்கப்பட்ட காவலர் மரணம்

Sep 12, 2018 1:03 PM

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியால் கொடூரமாக தாக்கப்பட்ட போலீசாரில் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த 9-ம் தேதி பிந்த் (Bhind) நகரக் காவல் நிலையத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த இரு காவலர்களை பின் புறமாகச் சென்று விசாரணைக் கைதி ஒருவர் பயங்கரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகின. இதில் அவர்கள் மயங்கியதும், கைதி தப்பி ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இதில் இரு காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், டெல்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தா.