​​ லஞ்சம் வாங்கி கைதான மோட்டார் வாகன ஆய்வாளருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட இடைத்தரகரின் சொத்து ஆவணங்கள் பறிமுதல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லஞ்சம் வாங்கி கைதான மோட்டார் வாகன ஆய்வாளருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட இடைத்தரகரின் சொத்து ஆவணங்கள் பறிமுதல்

லஞ்சம் வாங்கி கைதான மோட்டார் வாகன ஆய்வாளருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட இடைத்தரகரின் சொத்து ஆவணங்கள் பறிமுதல்

Sep 12, 2018 12:50 PM

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் லஞ்சம் வாங்கி கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட இடைத்தரகர் செந்தில்குமாரின் சேலம் வீட்டில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள பாபு என்பவர், வாகன தகுதி சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கையும், களவுமாக பிடிபட்டார்.

அவருடன் இடைத்தரகர் செந்தில் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் செம்மண்டலம் டவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனிடையே, மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுக்கு உடந்தையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட இடைத் தரகர் செந்தில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் முல்லைவாடி எல்.ஆர்.சி. நகரில் வசித்து வருகிறார். அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்றிரவு சோதனையைத் தொடங்கினர். விடிய விடிய நடைபெற்ற சோதனை காலையில் முடிவடைந்த நிலையில், இடைத்தரகர் செந்தில்குமார் 5 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆத்தூரில் உள்ள கங்கா பைனான்ஸ் மற்றும் ருத்ரா கங்கா சிட்பண்ட் ஆகிய நிதி நிறுவனங்களில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ள செந்தில்குமார், அவரது மனைவி கவிதா பெயரிலும் 75 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், நிலப் பத்திரங்கள், வங்கிக் கணக்கு ஆவணங்கள், 15 ஏ.டி.எம். கார்டுகள், எல்.ஐ.சி. பாலிசி ஆவணங்கள், தங்க நகை சீட்டு ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக கூறும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மொத்த மதிப்பு 5 கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.