​​ பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தாமதம் செய்யவில்லை : அமைச்சர் ஜெயக்குமார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தாமதம் செய்யவில்லை : அமைச்சர் ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தாமதம் செய்யவில்லை : அமைச்சர் ஜெயக்குமார்

Sep 12, 2018 12:46 PM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில், ஆளுநர் காலதாமதம் செய்வதாக கூறப்படுவதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழா மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான கால்கோள் நடும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், நந்தனத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என தெரிவித்தார். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக-வே வெற்றிபெறும் என கூறிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் காலதாமதம் செய்யவில்லை என குறிப்பிட்டார்.