​​ பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் போரட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் போரட்டம்

Published : Sep 12, 2018 12:40 PM

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் போரட்டம்

Sep 12, 2018 12:40 PM

கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்டமாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அவினாசி சாலையில் பீளமேடு சித்ரா பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் 5 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். அக்கல்லூரியில் அண்மையில் முதல்வராக பொறுப்பேற்ற பிருந்தா என்பவர், மாணவ மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்ததோடு, மீறினால் அதிக தொகையை அபராதமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விடுதி மாணவர்கள் 6 மணிக்கு மேல் வெளியில் செல்லக்கூடாது எனவும் புதிதாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி நுழைவு வாயிலை மூடிய நிர்வாகத்தினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.