​​ இந்திய ராணுவத்தை பலப்படுத்தவே ரபேல் போர் விமானங்கள்: பி.எஸ்.தனோவா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய ராணுவத்தை பலப்படுத்தவே ரபேல் போர் விமானங்கள்: பி.எஸ்.தனோவா

Published : Sep 12, 2018 12:32 PM

இந்திய ராணுவத்தை பலப்படுத்தவே ரபேல் போர் விமானங்கள்: பி.எஸ்.தனோவா

Sep 12, 2018 12:32 PM

உலகில் வேறு எந்த நாடும் சந்திக்காத அளவு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் இந்தியாவின் ராணுவத்தை பலப்படுத்தும் நோக்கத்துடனேயே ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படுவதாக விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் தனோனா (Birender Singh Dhanoa) தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனிடையே, பாஜகவில் இருந்து விலகிய அருண்ஷோரி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர், ரபேல் போர் விமானம் வாங்குவதில் நடைபெற்றுள்ள முறைகேடு நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக அஅணையில் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய விமானப் படைத் தளபதி பிரேந்தர் சிங் தனோவா, விமானப்படைக்கு 42 படைப்பிரிவுகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 31 படைப்பிரிவுகள் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எண்ணிக்கையை 42 படைப்பிரிவுகளாக்கினாலும் கூட எதிரி நாடுகளின் பலத்தை விட அது குறைவானதே ஆகும் என்றும் பிரேந்திர சிங் விளக்கமளித்துள்ளார்.

உலகில் வேறு எந்த நாடும் சந்திக்காத அளவு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் இந்தியாவின் ராணுவத்தை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே, மத்திய அரசு ரபேல் போர் விமானங்களை வாங்க முடிவெடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படுவதாகவும் பிரேந்தர் சிங் தனோவா தெரிவித்துள்ளார்.