​​ சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்தது அமெரிக்கா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்தது அமெரிக்கா

சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்தது அமெரிக்கா

Sep 12, 2018 12:29 PM

21 சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் அமெரிக்கா சேர்த்துள்ளது.

இந்தப் பட்டியலில் பஹாமாஸ் ((Bahamas)), பெலிஸ் ((Belize)), பொலிவியா ((Bolivia)), கொலம்பியா ((Colombia)), கோஸ்டாரிகா ((Costa Rica)), டொமினிகன் குடியரசு ((Dominican Republic)), ஈக்வடார் ((Ecuador))), எல்சல்வடார் ((El Salvador)), கவுதமாலா ((Guatemala)), ஹைத்தி ((Haiti)), ஹோண்டுராஸ் ((Honduras)), ஜமைக்கா ((Jamaica)), லாவோஸ் ((Laos)), மெக்சிகோ ((Mexico)), நிகரகுவா ((Nicaragua)), பனாமா ((Panama)), பெரு ((Peru)), வெனிசுலா ((Venezuela,)) ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் போதைப் பொருளுக்கு எதிரான இந்த நாட்டு அரசுகளின் மீதோ அல்லது அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு குறித்தோ குறை கூறவில்லை என்றும் இந்த நாடுகளின் புவியியல் வணிக மற்றும் பொருளாதார அம்சங்கள் சார்ந்து நடைபெறும் போதைப் பொருள் வணிகம் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.