​​ தமிழகத்தில் ஈ சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வெளியீடு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் ஈ சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வெளியீடு

தமிழகத்தில் ஈ சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வெளியீடு

Sep 12, 2018 11:40 AM

தமிழகத்தில் ஈ சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஈ சிகரெட் எனும் எலக்ட்ரானிக் சிகரெட் தடை செய்வதாக கடந்த ஜூன் 14-ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி கடந்த 3-ம் தேதியிட்ட அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஈ சிகரெட்டில் உள்ள மூலக்கூறுகள் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கொண்டிருப்பதாகவும், தீவிரமான நுரையீரல் பிரச்சனை, கர்ப்பிணிக்கும், சிசுவுக்கும் கேடு விளைவிக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி,கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், காவல், கல்வி, சுகாதாரத்துறைகளைச் சேர்ந்த 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போதைப்பொருள் கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீடி, சிகரெட்டுக்கு இணையாகவோ, அதைவிட அதிகமாகவோ அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஈ சிகரெட்கள் மற்றும் அதனைப் போன்ற சிகரெட்களின் உற்பத்தி, விற்பனை, விநியோகம், இறக்குமதி, பயன்பாடு, காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்குத் தமிழகத்தில் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.