​​ குட்கா குடோனுக்கு அழைத்துச் சென்று மாதவராவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா குடோனுக்கு அழைத்துச் சென்று மாதவராவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

Published : Sep 12, 2018 11:38 AM

குட்கா குடோனுக்கு அழைத்துச் சென்று மாதவராவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

Sep 12, 2018 11:38 AM

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. காவலில் எடுக்கப்பட்டுள்ள கிடங்கு உரிமையாளர் மாதவராவை செங்குன்றத்தில் உள்ள அவரது கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

மாதவராவ், அவரது இரு பங்குதாரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 5 பேரைக் காவலில் எடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தனித்தனியாக அழைத்துச் சென்று விடியவிடிய விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனர்.


இந்நிலையில் மாதவராவை செங்குன்றம் தீர்த்தங்கரையன்பட்டு பகுதியில் உள்ள அவரது கிடங்குக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். திங்கட்கிழமை மாதவராவின் மேலாளர்கள் மற்றும் உறவினர்களிடமும், செவ்வாய்கிழமை, மாதவராவின் உதவியாளரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் அளித்த தகவலின் பேரில் மாதவராவை கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, எஸ்.பி.ஐ. கரூர் வைஸ்யா வங்கிகளில் மாதவராவ் வைத்துள்ள இரண்டு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.