​​ பேன் கேக் சமைத்த ரஷ்ய அதிபர் புதின் - சீன அதிபர் ஸீ ஜின் பிங்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேன் கேக் சமைத்த ரஷ்ய அதிபர் புதின் - சீன அதிபர் ஸீ ஜின் பிங்

Published : Sep 12, 2018 11:16 AM

பேன் கேக் சமைத்த ரஷ்ய அதிபர் புதின் - சீன அதிபர் ஸீ ஜின் பிங்

Sep 12, 2018 11:16 AM

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் போட்டி போட்டுக் கொண்டு பேன்கேக் சமைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் விலாடிபோஸ்டக் ((Vladivostok))-ல் சர்வதேச பொருளாதார மன்ற சந்திப்பு நடைபெற்றது.

அதில் சீனாவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனப் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்கி சீன அதிபர் ஸீ ஜின்பிங், ரஷ்யா சென்றார். சந்திப்பிற்கு பின், ரஷ்யா மற்றும் சீன அதிபர்கள் இருவரும் சமையல்கலை நிபுணர்களை ஓரம்கட்டிவிட்டு தாங்களே போட்டி போட்டுக் கொண்டு தனித்தனியாக பேன்கேக் சமைத்தனர்.

ரஷ்ய பாரம்பரிய பேன் கேக்கான பினியை ((bini))கச்சிதமான வடிவத்தில் சமைத்ததற்காக சீன அதிபரை புதின் பாராட்டினார். இதேபோல், ரஷ்ய அதிபர் புதின் ஒரு முறை சீனப்பயணத்தின் போது, அந்நாட்டு அதிபர் ஸீ ஜின்பிங்கிற்கு சீனர்களின் பாரம்பரிய பேன்கேக் சமைத்துக் கொடுத்து சுவைக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.