​​ இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் 3 முறை அத்துமீறி நுழைந்ததாக தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் 3 முறை அத்துமீறி நுழைந்ததாக தகவல்

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் 3 முறை அத்துமீறி நுழைந்ததாக தகவல்

Sep 12, 2018 11:15 AM

இந்திய எல்லைக்குள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சீன ராணுவத்தினர் மூன்று முறை அத்துமீறி நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பூடானின் டோக்லம் பீடபூமியை சொந்தம் கொண்டாடிவரும் சீனா, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அங்கு சாலை அமைக்க முயற்சி செய்தது. இதை இந்திய ராணுவத்தினர் தடுக்க முயன்றதால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இந்தியா - சீனா இடையிலான பேச்சுவார்த்தையால் இருதரப்பு பதற்றம் தணிந்தது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பரஹோட்டி ((Barahoti)) பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3 முறை சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததாக, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்திய எல்லைக்குள் 300 மீட்டர் வரை ஊடுருவிய சீன ராணுவம், டெம்சாக் பகுதியில் 4 கூடாரங்களை அமைத்ததாக தகவல் வெளியானது. அதை இந்திய ராணுவமும் உறுதி செய்து, கூடாரங்களை அகற்றிய நிலையில், தற்போது 3 முறை சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த தகவல் வெளியாகியுள்ளது.