​​ உள்ளாட்சித்துறை முறைகேடு குறித்து ஆதாரங்களை தந்தால் இன்றைக்கே பதவி விலக தயார் - எஸ்.பி.வேலுமணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சித்துறை முறைகேடு குறித்து ஆதாரங்களை தந்தால் இன்றைக்கே பதவி விலக தயார் - எஸ்.பி.வேலுமணி

Published : Sep 12, 2018 11:10 AM

உள்ளாட்சித்துறை முறைகேடு குறித்து ஆதாரங்களை தந்தால் இன்றைக்கே பதவி விலக தயார் - எஸ்.பி.வேலுமணி

Sep 12, 2018 11:10 AM

உள்ளாட்சித்துறையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், புகார் குறித்து ஆதாரங்களை தந்தால் இன்றைக்கே பதவி விலக தயார் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் உள்ளாட்சித் துறையில் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் விவாதிக்க தயார் என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திமுகவில் ப்யூன் வேலை பார்த்த ஆர்.எஸ்.பாரதிக்கெல்லாம் தான் பதில் சொல்ல முடியாது என்றார்.

மேலும், தமிழகத்தில் மின்வெட்டு குறித்து பேசுவதற்கு டிடிவி தினகரனுக்கு அருகதையில்லை எனவும், மின்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் எங்குமே மின்வெட்டு இல்லை எனவும் குறிப்பிட்டார்.