​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை மாவட்டத்தில் ஏழாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

Published : Mar 14, 2018 8:48 PM

நெல்லை மாவட்டத்தில் ஏழாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

Mar 14, 2018 8:48 PM

பருவம் தப்பி பெய்த மழையால், நெல்லை மாவட்டம் முழுவதும் ஏழாயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின.

அம்மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத நிலையில், இந்த ஆண்டு பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பின. இந்த நீரை ஆதாரமாகக் கொண்டு, மணிமுத்தாறு, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, கடையம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இவை அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், கடந்த 2 நாள்களாக மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது.

இதனால் நெற்பயிர்கள் சாய்ந்ததோடு, வயல்வெளியில் தேங்கிய மழைநீரில் மூழ்கின. மழைநீர் இன்னும் வடியாததால், நெல்கதிரிலேயே நெல்மணிகள் முளைத்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் முழுவதும் ஏழாயிரம் ஏக்கர் பரப்பில் இவ்வாறு பருவம் தப்பிய மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.