​​ இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத புதிய வீழ்ச்சியாக ரூ.72 .88 ஆக சரிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத புதிய வீழ்ச்சியாக ரூ.72 .88 ஆக சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத புதிய வீழ்ச்சியாக ரூ.72 .88 ஆக சரிவு

Sep 12, 2018 10:17 AM

இந்திய ரூபாயின் மதிப்பு  வரலாறு காணாத புதிய வீழ்ச்சியாக 72 ரூபாய் 88 பைசாவாக சரிந்துள்ளது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைக் காலமாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 72 ரூபாய் 74 பைசாவாக சரிந்திருந்த ரூபாயின் மதிப்பு, மாலையில் சற்றே மீண்டு 72 ரூபாய் 69 பைசா என்ற அளவில் வந்து நின்றது. இந்நிலையில், இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு 19பைசாக்கள் சரிந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 88 பைசாவாக சரிந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கடுமையாக உயர்ந்து வருவது, அமெரிக்கா- சீனா இடையே தொடரும் வர்த்தகப் போர் ஆகியவற்றின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.