​​ சீக்கியர் புனித நூலான குரு கிராந்த சாகிப்பின் 414வது ஆண்டு விழா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீக்கியர் புனித நூலான குரு கிராந்த சாகிப்பின் 414வது ஆண்டு விழா

சீக்கியர் புனித நூலான குரு கிராந்த சாகிப்பின் 414வது ஆண்டு விழா

Sep 12, 2018 8:09 AM

அமிர்தசரஸ் பொற்கோவில் பிரகாஷ் பருவத்தையொட்டி திருவிழாக் கோலம் பூண்டது.ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் தங்கள் புனித நூலான குரு கிரந்த சாகிப்பை கோவிலுக்குள் அர்ப்பணித்ததன் 414வது ஆணடு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். புனித நூலை ஊர்வலமாகக் கொண்டு சென்ற வழியெங்கும் வீதிகளில் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

புனித நூல் போகும் பாதையில் சாலைகளைப் பெருக்கி சுத்தம் செய்தபடி சென்றனர். இவ்விழாவை முன்னிட்டு பொற்கோவிலுக்குள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சீக்கியர்களின் வீர வாள் சண்டை மற்றும் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் காண்போரை கவர்ந்தன.