​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் நலமுடன் உள்ளதாக டுவிட்டரில் பதிவு

Published : Mar 14, 2018 8:40 PM

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் நலமுடன் உள்ளதாக டுவிட்டரில் பதிவு

Mar 14, 2018 8:40 PM

திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிகிச்சைக்குப் பின் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார்.

நேற்று ராஜஸ்தானின் ஜோத்பூரில் "தஃக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்" படப்பிடிப்பில் பங்கேற்ற போது அமிதாப் பச்சன் மயங்கி விழுந்தார். இதை அடுத்து மும்பையில் இருந்து விமானம் மூலம் ஜோத்பூர் விரைந்த மருத்துவக் குழு அமிதாப் பச்சனுக்கு சிகிச்சை அளித்தது.

அமிதாப் பச்சனின் உடல் நலக்குறைவால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்த நிலையில், இன்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தம் மீது அன்பு கொண்டவர்கள் யார் என்பதை உடல் நலக் குறைவின் மூலம் அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். சிகிச்சைக்குப் பின்னர் தற்போது உடல் நலம் தேறி இருப்பதாக கூறியுள்ள அமிதாப் பச்சன், தொடர்ந்து உடல் நிலை குறித்த தகவல்களை பதிவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.