​​ தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Sep 12, 2018 8:05 AM

தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுச்சேரியிலும் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. ஓடைகளில்  கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் வெளியேறியதால், நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்துள்ளது .இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஒரு மாத காலமாக வெயில் வாட்டி வந்த நிலையில், விவசாயிகளும் பொதுமக்களும் மழையால் மகிழ்ந்தனர்.

இதனிடையே, வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.