​​ வாலை இழந்த முதலைக்கு செயற்கை வால் பொருத்தி விஞ்ஞானிகள் சாதனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாலை இழந்த முதலைக்கு செயற்கை வால் பொருத்தி விஞ்ஞானிகள் சாதனை

Published : Sep 12, 2018 8:02 AM

வாலை இழந்த முதலைக்கு செயற்கை வால் பொருத்தி விஞ்ஞானிகள் சாதனை

Sep 12, 2018 8:02 AM

அமெரிக்காவில் வாலை இழந்த முதலைக்கு செயற்கை வால் பொருத்தி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

அரிஸோனா மாகாணத்தில் முதலை ஒன்றைக் கடத்தியவர்களால் அந்த முதலையின் வால் துண்டிக்கப்பட்டது. பின்னர் அதனை மீட்ட வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த வனஉயிரினப் பூங்காவில் வைத்து வளர்த்து வந்தனர். வால் இல்லாததால் நீருக்குள் சென்று நீந்த முடியாமல் அந்த முதலை தத்தளித்தது. இதைப் பார்த்த விஞ்ஞானிகள் 3 டி முறையில் செயற்கையான முதலை வாலைத் தயாரித்தனர். பின்னர் அந்த செயற்கை வால் முதலைக்கு பொருத்தப்பட்டது. இதையடுத்து நீருக்குள் உற்சாகமாக நீந்தி வருகிறது அந்த முதலை.