​​ 2001 தாக்குதலில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டவர்களை சந்திக்க அதிபர் டிரம்ப் முடிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2001 தாக்குதலில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டவர்களை சந்திக்க அதிபர் டிரம்ப் முடிவு

2001 தாக்குதலில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டவர்களை சந்திக்க அதிபர் டிரம்ப் முடிவு

Sep 12, 2018 8:00 AM

2001ம் ஆண்டு தாக்குதலில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு காயமடைந்தவர்களைச் சந்திக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் உள்ள வர்த்தக மைய கட்டடங்கள் விமானங்கள் மோதி தரைமட்டமாக்கப்பட்டன. மற்றொரு விமானம் பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகமான பென்டகனில் மோதி தகர்க்கப்பட்டது.

அதிபர் மாளிகையை நோக்கிச் சென்ற 4வது விமானத்தில் உள்ளிருந்த பயணிகள் சண்டையிட்டதால் ஏற்பட்ட குழப்பத்தில் பென்சில்வேனியாவில் விழுந்து நொறுங்கியது. அதில் ஒரு சிலர் தற்போது உயிருடன் உள்ளனர். அமெரிக்கர்களைப் பொறுத்தவரை கதாநாயகர்களாக இருக்கும் அவர்களைப் பார்க்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் பென்சில்வேனியா சென்றுள்ளார்.