​​ காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து,தேர்தலை சந்திக்க தெலுங்குதேசம் முடிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து,தேர்தலை சந்திக்க தெலுங்குதேசம் முடிவு

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து,தேர்தலை சந்திக்க தெலுங்குதேசம் முடிவு

Sep 12, 2018 8:00 AM

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க தெலுங்குதேசம் முடிவு செய்துள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ர சமிதிக்கு  எதிரான வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காக காங்கிரசுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்துமாறு, தமது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு சந்திரபாபு நாயுடு கட்டளையிட்டார்.

இதன் அடிப்படையில் ஹைதராபாதில் நேற்று 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டணியில் மேலும் சில சிறிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின் ஆளுநரை சந்தித்த தெலுங்குதேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், காபந்து அரசைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.