​​ தெலுங்கானா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலுங்கானா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

தெலுங்கானா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

Sep 12, 2018 7:44 AM

தெலுங்கானா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. கொண்டக்கட்டு ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து 88 பயணிகளுடன் திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பேருந்து, சனிவாரம் பேட் அருகே மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் உருண்டது. இந்த விபத்தில் 57 பேர் மூச்சுத் திணறியும், உடல்நசுங்கியும் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

அமைச்சர் கே.டி.ராமராவ் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் சந்திரசேகரராவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.