​​ கருப்பின மங்கை "மிஸ் அமெரிக்கா" மகுடம் சூடினார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருப்பின மங்கை "மிஸ் அமெரிக்கா" மகுடம் சூடினார்

கருப்பின மங்கை "மிஸ் அமெரிக்கா" மகுடம் சூடினார்

Sep 12, 2018 7:41 AM

அமெரிக்காவின் நியுஜெர்சி மாகாணத்தின் அட்லாண்டிக் நகரில் நடைபெற்ற அழகிப் போட்டியில், இந்த ஆண்டுக்கான மிஸ் அமெரிக்காவாக கருப்பினத்தைச் சேர்ந்த நியா பிராங்க்ளின் மகுடம் சூட்டப்பட்டார். அவர் பெயரை அறிவித்த கடந்த ஆண்டின் அழகி காரா முண்ட் அவருக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்தார்.

எதிர்பாராத இந்த இன்ப அதிர்ச்சியால் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த நியா பிராங்ளினின் குடும்பத்தினர் உள்ளிட்ட கருப்பின மக்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். நிறத்தை விடவும் தோற்றத்திலும் திறமையிலும் தான் தற்போதைய அழகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதை உணர்த்தும் விதமாக இந்த தேர்வு அமைந்துள்ளது.