​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவை நெருங்கி வருகிறது ஃபுளோரன்ஸ் புயல்

Published : Sep 12, 2018 7:37 AM

அமெரிக்காவை நெருங்கி வருகிறது ஃபுளோரன்ஸ் புயல்

Sep 12, 2018 7:37 AM

ஃபுளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கரோலினா, விர்ஜீனியா மாநிலங்களில் கரையைக் கடக்க உள்ளதால் மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

மிகவும் அபாயகரமான புயல் என்ற நான்காவது ரகமாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஃபுளோரன்ஸ் புயல் நாளை மற்றும் நாளை மறுநாளில் தென்கிழக்கு அமெரிக்க கடற்கரைப் பகுதிகளில் கரையைக் கடக்கிறது.

அப்போது புயல்  வேகம் மணிக்கு 225 கிலோ மீட்டர் அளவிற்கு இருக்கும் என்பதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அவசர, அவசரமாக வாங்கிக் கொண்டு மக்கள் கார்களில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தொடங்கினர். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளன.